‘பறந்து செல்ல வா’ படத்தில் சூப்பர்ஸ்டார் பாடல்..!

parandhu_sellava-release

நாளை ‘பறந்து செல்ல வா’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிகர் நாசரின் மகன் லூத்புதீன் பாஷா நடித்துள்ளார். ஏற்கனவே ‘சைவம்’ படத்தில் நடித்திருந்தாலும் கூட, கதாநாயகனாக நடிக்கும் லூத்புதீனுக்கு இது முதல் படமாகும். இந்தப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, தனபால் பத்மநாபன் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க இந்தப்படம் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் என்றாலே நமக்கு ரஜினி-கமல் நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெற்ற ‘நம்ம ஊரு சிங்காரி.. சிங்கப்பூரு வந்தாளாம்’ பாடல் தான் உடனே ஞாபகத்துக்கு வரும். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் அதேசமயம் கதைக்கு தேவை என்பதாலும் இந்தப்பாடலை இந்ந்தப்படத்தில் அப்படியே படமாக்கியுள்ளார்களாம்.

மேலும் இந்தப்படத்தில் நகைச்சுவை நடிகர்களான சதீஷ், கருணாகரன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு சிங்கப்பூர் ஜாலி ட்ரிப் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி..