‘பாபநாசம்’ ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கியது..!

ரசிகர்களுக்கு இன்னொரு விஸ்வரூபமாக, ‘பாபநாசம்’ படம் மூலம் த்ரில்லிங் விருந்து வைக்க தயாராகிவிட்டார் கமல். மலையாள ‘த்ரிஷ்யம்’ ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே மலையாளத்தில் பார்த்தவர்கள் ஏற்றி விட்ட பில்டப்புகளும், ஊடகங்களில் த்ரிஷ்யம் குறித்து வெளியான செய்திகளும் இந்தப் படத்தின் மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏபடுத்தியுள்ளன.

நீண்டநாளைக்குப்பின் ஒரு வேட்டி கட்டிய கிராமத்து குடும்பத் தலைவனாக, தனது குடும்பத்தை காக்க போராடும் வித்தியாசமான கமலை இதில் பார்க்கப் போகிறோம் என்பது தான் படத்தின் ஹைலைட்.. உலகமெங்கும் ஜூலை-3ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நேற்று நள்ளிரவு முதல் துவங்கியது.