பகிரி – விமர்சனம்

விவசாயத்தையே உயிர்மூச்சாக நினைக்கும் தந்தைக்கு, அதற்கு நேரெதிரான குணமுள்ள மகனாக பிரபு ரணவீரன்.. தந்தையின் பிடிவாதத்திற்காக விவசாய படிப்பு படித்திருந்தாலும் கூட, ‘நாஸ்மாக்’கில் (டாஸ்மாக் தாங்க) சூப்பர்வைசர் வேலைக்கு சேர்ந்துவிடவேண்டும் என்பது ஆசை.. இந்த ஒன்லைனை வைத்து, குடியால் மக்கள் ஒரு பக்கம் அழிவை தேடிக்கொண்டிருக்க, அரசுவேலை என்கிற பகட்டால் விவசாயத்தை இளைஞர்கள் புறக்கணிக்கும் தீவிரத்தை சொல்லவந்திருக்கிறார் இயக்குனர்pagiri-review
இன்றைய தேதியில் சமூகத்தின் மேல் அக்கறையுள்ள சாதாரண மக்களை அச்சுறுத்தும் விஷயங்கள் இரண்டு… ஒன்று அழிந்துவரும் விவசாயம்.. மற்றொன்று அழிய மறுக்கும் மதுக்கடை.. இந்த இரண்டு பிரச்சனைகளையும் ஒன்றிணைத்து ‘பகிரி’ படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.. ஆனால் கொஞ்சம் ரூட் மாறி, சுற்றிவளைத்து சொல்லியிருக்கிறார்.

கதை என்ன கேட்கிறதோ அதற்கான பொருத்தமான நாயகனாக தெரிகிறார் பிரபு ரணவீரன்.. நாயகி ஷ்ராவியா துறுதுறு பெண்ணாக அசத்துகிறார்.. அவருக்கும் அவரது அம்மாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.. அதிலும் அந்த அம்மா கேரக்டரை ரவிமரியா ரவுண்டு கட்டுவதும், அவர் ‘ஆன்னா’ என அழைத்து ‘பல்பு’ கொடுப்பதும் செம லந்து. இவர்கள் தவிர ஏ.வெங்கடேஷ், மாரிமுத்து, கே.ராஜன் உள்ளிட்ட பலரும் தனகல்து பங்கைளிப்பை சிறப்பித்திருக்கிறார்கள். ‘நாஸ்மாக்கிற்கு இடம் தேடச்சொல்லும் அந்த அதிகாரி கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மது விலக்கு விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்குள் இருக்கிற சுயநல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதுடன், மதுபான கடைகள் மூலம் வருமானத்தைப் பெருக்க அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை, அதிலிருக்கிற லஞ்ச லாவண்யங்களை புட்டுப்புட்டு வைத்திருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.. ஆனால் ‘பகிரி’ என்கிற தலைப்புதான் கதைக்கு பொருந்தவே இல்லை.