இன்று பத்மபிரியா திருமணம் ; குஜராத் மாப்பிள்ளையை மணந்தார்..!

 

சேரன் இயக்கிய ‘தவமாய் தவமிருந்து’, ‘பொக்கிஷம்’ மற்றும் ‘மிருகம்’, உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மபிரியா. இன்று காலை மும்பையில் அவருக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

பத்மபிரியா ‘மிருகம்’ படத்தில் நடித்தபோது அவரது கன்னத்தில் இயக்குனர் சாமி அறைந்ததால் அப்போது பரபரப்பாக பேசப்பட்டார் பத்மபிரியா. அதன்பிறகு உற்சாகமாக நடித்து வந்த பத்மபிரியாவுக்கு வாய்ப்புகள் குறைந்ததால், வெளிநாட்டுக்கு சென்று, பாதியில் விட்ட படிப்பை தொடர்ந்தார் பத்மபிரியா.

அப்போதுதான் அங்கே படித்த ஜாஸ்மினுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து இன்று அது திருமணத்தில் முடிந்துள்ளது.  திருமணம் செய்துகொண்டாலும் தொடர்ந்து நடிக்க இருப்பதாக சொல்லும் பத்மபிரியா நடித்த ‘அயூப்பிண்டே புஸ்தகம்’ அவரது கல்யாணப்பரிசாக கடந்த வெள்ளியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.