“என்னுடைய ‘படைவீரன்’ தனா” ; மணிரத்னம் பெருமிதம்

Padaiveeran Audio Launch-1

‘மாரி’ படத்தில் வில்லனாக நடித்த பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ள படம் ‘படைவீரன்’.. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தை தனா என்பவர் இயக்கியுள்ளார்.. இவர் மணிரத்னத்திடம் சுமார் ஐந்து வருடங்களாக உதவி இயக்குனராக பணியாற்றியவர்..

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது சிஷ்யனுக்காக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார் மணிரத்னம்.. மேலும் இயக்குனர் தனா பற்றி பேசும்போது, “என்னுடைய படப்பிடிப்பில் உதவி இயக்குனராக தனா வேலை பார்த்தபோது ஒரு படைவீரன் போலத்தான் செயல்பட்டார்.. ஏதாவது பிரச்சனை என்றாலோ, அடிதடி என்றாலோ அங்கே முன்னாடி முதல் ஆளாக தனா தான் நிற்பார். அவரே ஒரு படைவீரன் தான்.. அதனால் இந்தப்படத்திற்கு ‘படைவீரன்’ என டைட்டில் வைத்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை” என பாராட்டினார் மணிரத்னம்.

அம்ரிதா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் கல்லூரி அகில் வில்லனாக நடித்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.. இந்தப்படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளார்.