டிச-23ல் உரிய தயாராகும் ‘பாம்பு சட்டை’..!

paampu-sattai-release-date
‘சதுரங்க வேட்டை’ படத்தை தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றிக்கனியை ருசித்த நடிகர் மனோபாலா இரண்டாவதாக தயாரித்துள்ள படம் தான் ‘பாம்பு சட்டை’.. பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் என ஸ்டார் அந்தஸ்து கொண்ட ஜோடி இந்தப்படத்தில் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.. படத்தை ஆடம்தாசன் என்பவர் இயக்கியுள்ளார்.

சமீபகலாமாக தொடர்ந்து சரிவுகளை சந்தித்துவரும் பாபி சிம்ஹாவை இந்தப்படம் நிமிர்ந்து உட்கார வைக்கும் என சொல்லப்படுகிறது.. இந்தப்படத்தை வரும் டிச-23ஆம் தேதி ரிலீஸ் செய்ய தீர்மானித்துள்ளார்களாம்.. அன்றைய தினம் தான் சூர்யாவின் ‘சிங்கம்-3’ படமும் வெளியாக இருக்கிறது என்பதால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி மாறினாலும் மாறலாம் என்கிறார்கள்.