‘பாம்பு சட்டை’ டீசரை இன்று வெளியிடுகிறார் விஷால்..!

paambhu-sattai-1

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடையாளப்படுத்திக்கொண்டவர் இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா. அந்தப்படத்தின் வெற்றி கொடுத்த ஊக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பாம்பு சட்டை’ என்கிற படத்தையும் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் ஆடம்தாசன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.. இந்த வருட இறுதிக்குள் இந்தப்படம் வெளியாக இருப்பதால், அதன் முன்னோட்டமாக டீசரை வெளியிட முடிவு செய்த மனோபாலா, அதை வெளியிடுமாறு விஷாலிடம் கோரிக்கை வைத்தார். விஷாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டதோடு இன்று ‘பாம்பு சட்டை’ படத்தின் டீசரை வெளியிடுகிறார்.

‘பாம்பு சட்டை’ படத்தின் விநியோக உரிமையை வாங்கி இருக்கும் ‘சினிமா சிட்டி’ கே.கங்காதரனோடு இணைந்து, அபி & அபி நிறுவனத்தின் நிறுவனர் திரு அபினேஷ் இளங்கோவன் இந்த படத்தை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.