பாடல்களை போட்டுக்காட்டியே கௌதம் கார்த்திக்கிடம் கால்ஷீட் வாங்கிய இயக்குனர்..!

வாரிசு நடிகர்களில் ஒருவராக அதேசமயம் மணிரத்னம் என்கிற ஜாம்பவான் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக்.. ஆனாலும் சில வருடங்களாகவே சினிமா அவருக்கு பிடிபடாமல் இருந்தது.. அதன் சூட்சுமம் இதுதான் என அறிந்துகொண்ட பிறகு ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் கௌதம் கார்த்தி.

அந்தவகையில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க காத்திருக்கும் கௌதம் காரத்தின் அடுத்த படமாக ஹரஹர மகாதேவகி படம் விரைவில் வெளியாக இருக்கிறது. கௌதம் கார்த்திக் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். சந்தோஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது

இந்தவிழாவில் கௌதம் கார்த்திக் பேசும்போது, “இந்த கதை பலரிடம் சென்று மீண்டும் என்னை தேடி வந்துள்ளது. இயக்குநர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களை தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் நான் மிகவும் ரசித்து, சிரித்து கேட்டேன். பாடல்களை கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு இயக்குநர் என்னிடம் ஹரஹர மகாதேவகியின் கதையை கூறினார். எனக்கு கதையும் மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் நான் சந்தோஷமாக என்ஜாய் செய்து நடித்தேன்” என கூறினார்..

இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வெளியிடுகிறார். இந்தப்படம் எந்த அளவுக்கு ஞானவேல் ராஜாவுக்கு திருப்தி தந்துள்ளது என்றால், தனது அடுத்த படத்தையும் கௌதம் கார்த்தி-சந்தோஷ் கூட்டணியை வைத்து தயாரிக்க இருக்கிறார். படத்தின் பெயர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.