சரத்குமாருக்கு ஜோடியானார் ஓவியா..!

சமீபகாலமாக கதாநாயகன் பாத்திரம் அல்லாமல் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துவரும் சரத்குமார் தற்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக அதுவும் டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடிக்கிறார். படத்தின் பெயர் ‘சண்டமாருதம்’.

இதில் வில்லனாகவும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார் வில்லனாக நடிக்கும் முதல் படம் இதுதான். கதாநாயகிகளாக ஓவியாவும் மீரா நந்தனும் நடிக்கிறார்கள். இயக்குனர் சமுத்திரகனியும், பிரபல கன்னட நடிகருமான அருண்சாகரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

படத்தை இயக்குவது சரத்குமாரின் ஆஸ்தான் இயக்குனர்களில் இன்னொருவரான ஏ.வெங்கடேஷ். இந்தப்படத்தின் கதையை சரத்குமாரே எழுதியிருக்கிறார். திரைக்கதை வசனத்தை ஏ.வெங்கடேஷுடன் இணைந்து பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதுகிறார்.