பிந்து மாதவியின் அறிவுரையை ஏற்பாரா ஓவியா..?

bindu madhavi - oviya

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஓவியா மனதில் பட்டதை பேசுகிறார், நேர்மையாக இருக்கிறார் என பாராட்டுக்கள் குவிகின்றன.. இருந்தாலும் கடந்த சில நாட்களாக ஆரவ்வால் மனதளவில் காயம்பட்ட ஓவியா, சில நேரங்களில் கொஞ்சம் அதிகப்படியாகவே நடந்துகொள்கிறாரோ என்றே தோன்றுகிறது..

தான் சாப்பிட்ட தட்டை கழுவாமல் அலட்சியம் காட்டுவது, சினேகனின் பேச்சையே நீங்கள் யார் சொல்வதற்கு என அலட்சியப்படுத்துவது என ரசிகர்களை சற்றே முகம் சுழிக்கவும் வைக்கிறார் ஓவியா. இந்தநிலையில் இந்த வாரம் புதிதாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள பிந்துமாதவி, ஓவியாவின் இந்த மனநிலை கண்டு அவரை அவ்வப்போது சரியான மூடுக்கு மாற்றும் விதமாக பிந்துமாதவி அவரை நெருங்குகிறார்..

ஆனால் ஓவியா இருக்கும் மனநிலையில் பிந்துமாதவியின் பேச்சுக்கள் எதுவும் அவரது காதில் விழுவதாக தெரியவில்லை.. அவரையும் அலட்சியப்படுத்தவே செய்கிறார். பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை அனைவரும் வெறுத்து ஒதுக்கும் நிலையில், ஏற்கனவே வெளியில் இருந்து இதுவரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பார்த்துவிட்டு உள்ளே வந்திருக்கும் பிந்துமாதவி நடுநிலையுடன் நடக்கவே முயல்கிறார்.

இதை பயன்படுத்தி அவருடன் நல்ல நட்பை ஓவியா வளர்த்துக்கொண்டால் அந்த நட்பின் மூலமாக அவரது மன அழுத்தம் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றே பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.