ஓவியா – சினேகன் கூட்டணியில் படம் தயாரிக்கும் இசையமைப்பாளர்..!

snehan-oviya

நடிகையாக களவாணி மூலம் ஓவியாவும், பாடலாசிரியராக கவிஞர் சிநேகனும் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான்.. ஆனாலும் நூறு நாட்களாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இவர்களை வீடுதோறும் உள்ள தாய்மார்கள், சிறியவர்கள் வரை அனைவரிடமும் இன்னும் நெருக்கமாக ஆக்கியது..அதிலும் ஓவியா ஒவ்வ்வ்வொருவர் வீட்டிலும் செள்ளபேன் போலவே ஆகிப்போனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியாவை தேடி நிறையா பட வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில் சினேகன்-ஓவியா இருவரையும் இணைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா. எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளவர் தான் சி.சத்யா.. தற்போது இந்தப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறுகிறார்.