“ஒருநாள் கூத்து’க்காக இன்னொரு பஞ்சாயத்தா..?” – இயக்குனர் பாண்டிராஜ்..!

‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் அடுத்ததாக தயாரித்துள்ள படம் தான் ‘ஒருநாள் கூத்து’. இந்தப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக மியா ஜார்ஜ், துபாய் அழகி நிவேதா மற்றும் மெட்ராஸ்’ ரித்விகா நடிக்க, முக்கிய வேடங்களில் கருணாகரன், ரமேஷ் திலக், பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், மோகன்ராஜா, பாண்டிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.. படத்தின் மையக்கரு ‘ஒருநாள் கூத்து’ ஆக நடைபெறும் திருமண விழாவை பற்றியது என்பதால் வாழ்த்த வந்த பிரபலங்களிடம் அவர்களது ‘ஒருநாள் கூத்து’ பற்றிய அனுபவங்களை பேச சொன்னார்கள்..

இயக்குனர் பாண்டிராஜிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது, “ஏற்கனவே இதே மாதிரி ஒரு நிகழ்ச்சில என்னை அறியாம இதேபோல ஒரு கேள்விக்கு பதில் சொல்லி வீட்டுக்காரம்மா கிட்ட மாட்டிக்கிட்டேன்.. அந்த பஞ்சாயத்தே இன்னும் முடியல.. அதுக்குள்ளே இன்னொரு பஞ்சாயத்தா.. திரும்பவும் கோர்த்து விட்றாதீங்கப்பா” என உஷாராக எஸ்கேப் ஆனார் பாண்டிராஜ்.