ஒரு குப்பை கதை’ பட திருட்டுக்கு உடந்தையாக இருந்த தியேட்டருக்கு சீல்..!

சமீபத்தில் வெளியான படம் தான் ‘ஒரு குப்பை கதை’. அஸ்லம் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்க,காளி ரங்கசாமி என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் ரசிகர்கள் வரவேற்பை பெற்று இப்போதும் நிறைய தியேட்டர்களில் ஒடிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை கோமதி திரையரங்கத்தில் ஒரு குப்பை கதை திரைப்படம் திருட்டுத்தனமாக படம் பிடித்தது கண்டு பிடிக்கபட்டுள்ளது. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் தலைமையில் செயல்படும் நிர்வாகத்திடம் மேற்கண்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர் புகார் கொடுத்தார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறை அதிரடியாக அந்த திரையரங்கிற்கு சீல் வைத்தும் அந்த திரையரங்க ஊழியர் ஒருவரையும் கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது