அட்லீ-விஜய் கூட்டணியில் இணைகிறார் நயன்தாரா..?

vijay_nayanatara
பரதன் இயக்கத்தில் தற்போது ‘பைரவா’ படத்தில் நடித்தவரும் விஜய், அடுத்ததாக மீண்டும் அட்லீ டைரக்சனில் நடிக்க இருக்கிறார் என்பதுதான் பல நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கும் செய்தி.. இதில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்கிற கிளைச்செய்தியும் கடந்த மாதம் சேர்ந்துகொண்டது..

ஆனால் இப்போது விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக சொல்லப்படுகிறது. சீனியர் ஆகிவிட்டாலும் கூட முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில் நயன்தாரவுக்கான இடம் அப்படியேதான் இருக்கிறது. ஏற்கனவே ராஜாராணி படத்தில் தனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து பெயர் வாங்கித்தந்தவர் என்பதால் மீண்டும் அட்லீயின் டைரக்சனில் அதிலும் விஜய் ஜோடியாக நடிக்க நயன்தாராவுக்கு என்ன தயக்கம் இருக்கப்போகிறது..?