மீண்டும் இணையும் ஜெய்–அஞ்சலி ஜோடி..!

anjali - jai

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற ஜோடியாக பேசப்பட்டவர்கள் தான் ஜெய்யும் அஞ்சலியும்.. ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை, அதற்கடுத்து வெளியான காதல் கிசுகிசுக்களால் இவர்கள் இருவரும் தொடர்ந்து இணைந்து நடிக்காமல் விலகிக்கொண்டார்கள்.

இப்போது இவர்கள் இருவரையும் இணைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் புதுமுக இயக்குனர் சினிஷ் என்பவர். அதற்கேற்ற மாதிரி நேற்று முன்தினம் அஞ்சலியின் பிறந்தநாளன்று ஜெய் வாழ்த்து தெரிவிக்க, அதற்கு நன்றி தெரிவித்து அஞ்சலியும் பதிலிட்டுள்ளார்.