மீண்டும் கௌதம் மேனன் டைரக்சனில் கமல்..?

kamal - gautham
தமிழ்சினிமாவில் இதுவரை வெளியான போலீஸ் படங்களை பட்டியலிட்டால் கௌதம் மேனன்-கமல் கூட்டணியில் உருவான ‘வேட்டையாடு விளையாட்டு’ படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.. கமல் தனது முந்தைய போலீஸ் படங்களை விட, இதில் போலீஸ் அதிகாரி ராகவனாக வித்தியாசம் பரிமாணம் காட்டியிருந்தார்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த கூட்டணி மீண்டும் உருவாகாதா எனவும் இதோ இவர்கள் இருவரும் இணையப்போகிறார்கள் எனவும் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதோ இப்போது கூட, “மீண்டும் கமல் சாருடன் ஒரு வித்தியாசமான கதையில் கைகோர்க்க விரும்புகிறேன்.. ஆனால் கமல் சாருக்கு அதில் விருப்பம் இருக்கிறதா என்பது உறுதியாக தெரியவில்லை” என்று கூறியுள்ளார் கௌதம் மேனன். சினிமாவில் எதுவும் நடக்க்கலாம் தானே..