விஷ்ணு படத்தில் மீண்டும் ஆர்யா..!

‘சிவாஜி’யிலும் ‘சிவகாசி’யிலும் நயன்தாரா ஒரு பாட்டுக்கு மட்டும்  நடனம் ஆடியது ஏன்..? எல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான். முன்னணி நடிகைகள் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடிவிட்டுப் போவது எப்படி ஒருவகையான விளம்பரமாகிறதோ,  அதே போலத்தான்  பிரபல நடிகர்கள் நட்புக்காக தங்களுக்கு வேண்டிய ஹீரோக்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிப்பதும்..

இதுவும் படத்தின் பப்ளிசிட்டிக்கும் வியாபாரத்துக்கும் ரொம்பவே உதவியாக இருக்கும். அந்த வகையில் முன்னணியில் இருக்கும் கதாநாயகன் ஆர்யாவும் வளர்ந்து முன்னணி கதாநாயகனாக மாறிவரும் விஜய்சேதுபதியும் நேசக்கரம் நீட்டுவதில் போட்டிபோடுகிறார்கள். அதிலும் ஆர்யா கெஸ்ட் ரோலில் சாதனை படிக்கும் முனைப்புடன் முன்னேறி வருகிறார் போலும்..

ஏற்கனவே விஷ்ணு நடித்த ‘ஜீவா’வில் ஆர்யாவாகவே சிறப்புத்தோற்றத்தில் நடித்தவர், இப்போது லேட்டஸ்டாக விஷ்ணு நடித்துள்ள ‘இன்று நேற்று நாளை’யிலும் கெஸ்ட்ரோலில் வருகிறார் ஆர்யா. ஞானவேல்ராஜா மற்றும் சி.வி.குமார் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தை ரவிகுமார் என்பவர் இயக்க, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.