டிச-7ஆம் தேதிக்குள் ‘அனேகன்’ ட்ரெய்லர் ; கே.வி.ஆனந்த் உறுதி..!

 

எதிர்பார்ப்புகளை தூண்டிபடியே கோழி, தனது முட்டையை அடைகாப்பதுபோல ‘அனேகன்’ பட ரிலீஸ் பற்றிய அறிவிப்பை இன்னும் வெளியிடாமலேயே வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். தனுஷ், கார்த்திக், அமிரா தஸ்தூர் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஆனால் இந்தப்படத்தின் ட்ரெய்லரை ஏற்கனவே சொல்லியிருந்தபடி வரும் டிச-7ஆம் தேதிக்குள் ரிலீஸ் பண்ணிவிடுவேன் என உறுதி அளித்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.. “ஹாரிஸும் எடிட்டர் ஆண்டனியும் ‘என்னை அறிந்தால்’ இறுதிக்கட்ட பணியில் பிஸியாக இருப்பதால் தான் கொஞ்சம் தாமதமாகிவிட்டது” என ட்ரெய்லர் ரிலீஸ் தாமதமாவது பற்றி டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.