ஜூன்–4ல் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ ஆடியோ வெளியீடு..!


ஒரு மிருகக்காட்சி சாலையை சுற்றிப்பார்க்க செல்லும் நான்கு மாணவிகள் வழி தெரியாமல் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கே வேலை பார்க்கும் பாதுகாவலரான நிதின் சத்யா அவர்களை எப்படி மீட்டு அனுப்பி வைக்கிறார் என்பதைத்தான் இரண்டு மணி நேரம் சுவராஸ்யமான சம்பவமாக படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் குரு ரமேஷ்.

இவர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக மட்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ‘ஜெயம்’ராஜா இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

படத்தின் சிறப்பம்சமே ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் நடித்திருப்பதுதான். இந்த குழந்தைகளின் அப்பாவாகத்தான் இயக்குனர் ஜெயம்ராஜா நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஜுன்-4ஆம் தேதி நடைபெற இருக்கிறது.