அமெரிக்காவில் 7௦ இடங்களில் வெளியாகும் ‘ஓ காதல் கண்மணி’..!

மணிரத்னம் ரசிகர்களுக்கு நாளை திருவிழா தான் போங்கள்.. கடல் படத்தை தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப்பின் அவரது இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் வழக்கத்தை விட கூடுதலான எதிர்பார்ப்பு இந்தப்படத்துக்கு எழுந்துள்ளது. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையும். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் பிளஸ் ஆக இருக்கும்.

மணிரத்னம் படங்கள் மீது இன்றளவும் குறையாத கிரேஸ் காரணமாகவும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதாலும் அமெரிக்காவில் மட்டும் 7௦ இடங்களில் இந்தப்படம் திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் இத்தனை தியேட்டர்களில் தனது படம் வெளியாவது துல்கருக்கு நிச்சயம் புது அனுபவமாகத்தான் இருக்கும். இந்தப்படத்திற்கு சரியான டப் கொடுக்கும் விதமாக லாரன்ஸின் ‘காஞ்சனா-2’வும் நாளைதான் ரிலீஸாகிறது.