தந்தை மகன் இரண்டு பேருக்குமே இப்போது நிம்மதி..!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் நேற்று முன்தினம் வெளியான, ஒன்பது பாடல்களை கொண்ட ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பாடல்கள் மெல்ல மெல்ல வைரஸாக ஊடுருவி வைரலாக மாறிவருகிறது. மணிரத்னம், துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இந்தப்படம் முதலில் ஏப்-1௦ ஆம் தேதி வெளியாவதாகத்தான் இருந்தது.

ஆனால் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு வரும் ஏப்ரல்-17ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் வெளியிடுகிறது. இதே ஏப்ரல்-1௦ஆம் தேதியில் தான் துல்கர் சல்மானின் தந்தையும் மலையாள திரையுலகின் மெகாஸ்டாருமான மம்முட்டியின் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தந்தை, மகன் என்றாலும் தொழில் என்று வரும்போது எதிர் எதிர் போட்டியாளர்கள் தான்..! மம்முட்டிக்கும் துல்கர் சல்மானுக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் இப்படி ஒரு மோதல் ஏற்பட இருந்ததாக ஞாபகம்.. இனி தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்கள் போல போல ஒரே நாளில் தந்தையும் மகனும் நகத்தை கடித்துக்கொண்டு டென்சனுடன் இருக்க தேவையில்லைதானே..!