நவ-9ல் ‘இப்படை வெல்லும்’ ரிலீஸ்..!

ippadai vellum release date

சிகரம் தொடு படத்தை தொடர்ந்து இயக்குனர் கௌரவ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் தான் ‘இப்படை வெல்லும்’. இதில் உதயநிதி ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்தப்படம் வரும் நவ-9ஆம் தேதி ரிலீஸாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். மறுநாள் நவ-1௦ஆம் தேதி சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.