“படங்களுக்கு பாடல்கள் தேவையில்லை” ; விஜய் ஆண்டனி..!

vijay antony speech about songs

விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று ‘அண்ணாதுரை’ படம் வெளியாகியுள்ளது. ஜி.சீனிவாசன் இயக்கியுள்ள இந்தப்படத்தை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் அண்ணாதுரை-தம்பிதுரை என இரண்டு வேடங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன் படத்தின் எடிட்டிங்கையும் கவனித்துள்ளார்.

இன்று படம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து, அதற்காக ஏற்பாடு செய்யப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி, மழை காரணமாக தயாரிப்பாளர் ராதிகா வர சற்று தாமதமாகவே, பத்திரிகையாளர்களுடன் தனது சினிமா பயண அனுபவங்கள் குறித்து ரொம்பவே இயல்பாக கலந்துரையாடினார்.

குறிப்பாக கல்லூரி காலத்தில் மற்றவர்களை கவர்வதற்காகவே இசைத்துறையை கையில் எடுத்ததாகவும் ஆனால் முறையாக எந்த இசையையும் கற்றுக்கொண்டு தான் சினிமாவுக்குள் நுழையவில்லை என்றும் வெளிப்படையாக கூறினார்..

கேள்வி ஞானத்தை வைத்தே இசையமைப்பதாக கூறிய விஜய் ஆண்டனி, தன்னைப்பொறுத்தவரை படங்களுக்கு பாடல்கள் என்பதே தேவையில்லை என்றும், அதனால் தனது படங்களில் பாடல்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டாலும் நம் ரசிகர்கள் பாடல்களுக்கு பழகிவிட்டதால், அவர்களுக்காக சிரத்தை எடுத்து இசையமைப்பதாகவும் கூறினார்.