“கத்திக்கு தடைவிதிக்க முடியாது” – நீதிமன்றம் அதிரடி..!

உப்பு பெறாத காரணங்களுக்காகவெல்லாம் சிலர் நீதிமன்றத்தில் தடைகேட்டு மனு செய்வது உண்டு. சில நேரங்களில் அதற்காக நீதிபதியிடம் வாங்கிக்கட்டிக்கொள்வதும் உண்டு.. தற்போது விஜய் நடித்துள்ள ‘கத்தி’ படத்தை தடைசெய்ய வேண்டுமென்று மனு செய்த ஒருவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதும் நீதிபதியின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளதும் அப்படித்தான்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “ஒரு படத்தை தணிக்கை வாரியம் போன்ற அரசின் அதிகாரப்பூர்வமான ஒரு அமைப்பு நன்கு பரிசீலித்து அதை வெளியிடலாம் என சான்றிதழும் அளித்தபின் இது போன்ற எதிர்ப்பு மனுக்களை தாக்கல் செய்வதை ஊக்குவிக்கமுடியாது என கண்டனமும் தெரிவித்துள்ளார்.

‘கத்தி’ படத்திற்கு புற எதிர்ப்புகளை பல தமிழ் அமைப்புகள் தொடர்ந்து காட்டி வருகின்றன. அதைக்கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியாலோ, அல்லது விளம்பரத்துக்காகவோ இப்படி தடைகோரும் ஆட்களை இனி உள்ளே தள்ள சட்டம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.