நிவின்பாலி நடிக்கும் தமிழ்படத்தின் டைட்டில் ‘ரிச்சி’..!

nivin pauly

மலையாள இளம் முன்னணி நடிகரான நிவின்பாலி, நேரம் என்கிற தனது முதல் படத்தில் அறிமுக நாயகனாக தமிழில் தலைகாட்டியதோடு சரி.. மலையாளத்தில் இப்போது டாப் ஹீரோவாக வளர்ந்து அந்த கெத்துடன் தமிழில் நுழைந்திருக்கிறார்.. இவர் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கினின் சீடரான கௌதம் ராமச்சந்திரன்..

இந்தப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் ‘கள்ளபடம்’ லட்சுமி ப்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இன்னொரு கதாநாயகனாக ‘சதுரங்க வேட்டை’ புகழ் நட்டி நடிக்கிறார் இந்தப்படத்தில் மிக முக்கியமான பாதிரியார் கேரக்டரில் பிரகாஷ்ராஜும், இன்னொரு முக்கியமான கேரக்டரில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் நடித்துள்ளார்கள்..

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின்பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இதுநாள்வரை டைட்டில் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வாந்தார்கள்.. இப்போது படத்திற்கு ‘ரிச்சி’ என பெயர் வைத்துள்ளார்கள். வரும் கோடை விடுமுறையில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.