திமிரு பிடிச்சவனுக்கு ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்..!

nivetha pethuraj

‘தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படங்களில் நடித்து சீரான வளர்ச்சியில் சென்று கொண்டிருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.. இவர் நடித்த ‘டிக் டிக் டிக்’ படம் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. அதற்கடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த ‘பார்ட்டி’ படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

தற்போது எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ‘ஜகஜால கில்லாடி’ படத்தில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இதையடுத்து ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், விஜய் ஆண்டனி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். விஜய் ஆண்டனியை போல இதில் நிவேதாவுக்கும் போலீஸ் கேரக்டர் தானாம்.