3டி படத்தில் நடிக்கும் நிமிர் பட நாயகி..!

மலையாள சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவர் தான் நமீதா பிரமோத்… நிமிர் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் தனது வசீகரமான முகத்தாலும், பளீர் சிரிப்பாலும் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விடுபவர்.

சமீபத்தில் நமீதா பிரமோத் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றதோடு, அவருக்கு பாராட்டுக்களையும் பெற்றுத் தந்த கம்மர சம்பவம் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் நமீதா பிரமோத். சித்தார்த், திலீப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்தில் நமீதா நடித்த ‘பானுமதி’ கதாபாத்திரம் கூடுதல் ஈர்ப்பாக திகழ்ந்தது.

தற்போது திலீப் உடன் ஒரு 3D படத்தில் இணைந்து நடிக்கிறார் நமீதா பிரமோத். இது பற்றி அவர் கூறும்போது, “இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சியாகும். பெரிய அளவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து கொச்சி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது” என்கிறார் நமீதா பிரமோத்.