“என் பேவரைட் சூப்பர்ஸ்டார் ரஜினி தான்” ; நிக்கியின் லைவ் சாட்..!

nikki-galrani

நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வரும் நவ-10ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ். இன்னொரு நாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். படம் வெளியாக இருப்பதையொட்டி நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை தனது பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளித்து, படத்தின் புரமோஷனில் ஈடுபட்டார் நிக்கி.

விஜய், அஜித் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இருவருடனும் நடிக்கும் ஆசை தனக்கு உள்ளது என்றும், இருவரில் யார் பெரியவர் என்கிற சண்டை மட்டும் ரசிகர்கள் போடவேண்டாமே எனவும் கேட்டுக்கொண்டார். உங்களது பேவரைட் நடிகர் யார் என்கிற கேள்விக்கு, ஒன் அன்ட் ஒன்லி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என பதிலளித்தார் நிக்கி கல்ராணி. ரசிகர்கள் யாவருடனும் மனம் கோணாமல் நிக்கி கல்ராணி உரையாடியது பாராட்டுக்களை பெற்றுள்ளது.