மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் ‘டார்லிங்’..!

darling pair
ஜி.வி.பிரகாஷ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் வெளியான படம் ‘டார்லிங்’.. இந்த வெற்றிப்படத்தில் நாயகியாக நடித்த நிக்கி கல்ராணியின் பங்கு கணிசமானது. இந்தப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடிபுகுந்த நிக்கி கல்ராணி, இப்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார்.

‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’ படத்துக்குப் பிறகு, எம்.ராஜேஷ் இயக்கவிருக்கும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக பிரபல தெலுங்கு ஹீரோயினான அவீகா கோர் தமிழிலில் அறிமுகமாகிறார். தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆர்.ஜே..பாலாஜி, நான் கடவுள் ராஜேந்திரன், ரோபோ ஷங்கர் என்கிற நட்சத்திர பட்டாளத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ்​ ​நடிக்கிறார் இந்தப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கவிருக்கிறார்.

பயணத்தில் வரும் சந்திப்பு என்றுமே சுகமான நினைவுகள் தான். அப்படி ஒரு பயணத்தில் இரண்டு பெண்களை நாயகன் சந்திக்கிறான். நாயகனை ஒருத்தி காதலிக்க, நாயகனோ மற்றொருவளை காதலிக்கிறான். இதன் முடிவு படுசுவாரஸ்யமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ராஜேஷ். இப்படத்திற்கான படப்பிடிப்பு தளங்களாக கோவா, பாண்டிச்சேரி மற்றும் விசாகபட்டினம் என கடற்கரை ஓர நகரங்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.