‘நிபுணன்’ படத்துக்கு கதவை அகல திறந்துவிட்ட வி.ஐ.பி-2’..!

nibunan release

இந்தவாரம் (ஜூலை-28) வெளியாக இருந்த தனுஷின் வி.ஐ.பி-2 படம் சில காரணங்களால் வெளியாகத சூழ்நிலை ஏற்பட்டு, வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அதன் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.. இது இதேநாளில் வெளியாகும் அர்ஜுனின் ‘நிபுணன்’ மற்றும் அசோக் செல்வனின் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஆகிய படங்களுக்கு ரொம்பவே உதவிகரமாக அமைந்துவிட்டது.

குறிப்பாக ‘நிபுணன்’ படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்திருந்த நிலையில் ‘வி.ஐ.பி-2’ போட்டியில் இருந்து வெளியேறியதால், இன்னும் அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். கடந்து ஜூலை-7ஆம் தேதியே வெளியாவதாக திட்டமிடப்பட்டிருந்த ‘நிபுணன்’ படம் தியேட்டர் ஸ்ட்ரைக் காரணமாக தள்ளிப்போனாலும் கூட, இப்போது நிறைய தியேட்டர்களுடன் நல்லதொரு சூழலில் தான் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.