“படம் வந்ததும் பார்க்கிறேன்” ; ’நிபுணன்’ டீசரை ரசித்த ரஜினி..!

nibunan

ஆக்சன் கிங் அர்ஜுனின் 150வது படமாக உருவாகி வருகிறது நிபுணன்.. தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். பிரசன்னா, வரலட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

நிபுணன் டீசர் வருகின்ற 15ஆம் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்னர் அர்ஜுன் உட்பட நிபுணன் படக்குழுவினர் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற சென்றார்களாம்.. அப்போது அவர் ‘நிபுணன்’ படத்தின் டீசரை பார்த்து ரொம்பவே உற்சாகமாகி இது கட்டாயம் வெற்றிபெறக்கூடிய படம் என அவருக்கே உரிய பாணியில் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்..

அதுமட்டுமல்ல படம் வெளிவரும் நேரம் தான் நிச்சயம் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்தாராம். “அர்ஜுன் சாருக்கும், ரஜினி சாருக்கும் இருந்த பரஸ்பர அன்பையும் மரியாதையையும் கண்டு நாங்கள் வியந்துப் போனோம்” என்கிறார் அருண் வைத்தியநாதன் ஆச்சர்யம் விலகாமல்..