என்ஜிகே படப்பிடிப்பு நிறைவு

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை, இயக்குனர் செல்வராகவனுக்கு என ரசிகர் பட்டாளமும் மார்க்கெட் வேல்யூவும் எப்போதும் குறைந்ததில்லை. அதனால் தான் நடிகர் சூர்யா அவருடைய இயக்கத்தில், தானே விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டு என்ஜிகே படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. படத்தின் ரிலீஸ் தேதியும் அவ்வப்போது தள்ளிப்போனது.

இன்னொரு பக்கம் சூர்யா, கே வி ஆனந்த்தின் காப்பான் படத்தில் முழுமூச்சுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப்படத்தின் சில நாட்கள் காட்சியை படமாக்குவதற்கு, சூர்யாவிடம் மீண்டும் தேதி கேட்டு வாங்கி படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் செல்வராகவன். இததை தொடர்ந்து மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ‘நான் வாரேன்’ என்கிற வார்த்தைகளுடன் என்ஜிகே படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.