என்.ஜி.கே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்..!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘என்.ஜி.கே’. அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து வருகிறது.

இந்தப்படம் பிரமாண்டமான முறையில் அதே சமயம் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தயாராகி வருவதால் படத்தின் ரிலீஸ் தாமதமாகி வருவதாக தயாரிப்பாளர் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.