மே-31ல் சூர்யாவின் என்ஜிகே ரிலீஸ்..!

ngk release

சூர்யா மற்றும் செல்வராகவன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘என்.ஜி.கே.(நந்த கோபாலன் குமரன்)’ இதில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இதன் டீஸர் ரிலீஸானது. இந்நிலையில் மே மாதம் 31-ம் தேதி உலகம் முழுவதும் ‘என்ஜிகே’ வெளியாகும் என அறிவித்துள்ளார்.