புதுப்படங்களால் களைகட்டும் ஏப்-27

ap 27 films

திரையுலகில் கடந்த ஒன்றரை மாதமாக நிலவி வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால், அடுத்தடுத்து புதிய படங்கள் ரிலீஸாவதற்கு வரிசைகட்டி நிற்கின்றன. அந்தவகையில் கடந்த வெள்ளியன்று கார்த்திக் சுப்பராஜ்-பிரபுதேவா கூட்டணியில் உருவான மெர்க்குரி படம் வெளியானது.

அதை தொடர்ந்து வரும் ஏப்-27ஆம் தேதி அரவிந்த்சாமி-அமலாபால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல், விக்ரம்பிரபு-பிந்துமாதவி-நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘பக்கா’ மற்றும் விஜய் டைரக்சனில் சாய்பல்லவி நடித்துள்ள ‘தியா’ ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன.