கம்யூட்டர் கால திருவிளையாடலாக உருவாகியுள்ள ‘பிரம்மா டாட் காம்’..!

bramma dot com

கணேஷ் ட்ரீம் ஃபாக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் மிலானா கார்த்திகேயன் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படம் ‘பிரம்மா டாட் காம்’. இதில் நகுல், ஆஷ்னா ஜாவேரி, கே பாக்யராஜ், கௌசல்யா, நீது சந்திரா, சோனா, உபாசனா, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், சித்தார்த் விபின், பிரேமப்ரியா, ஸ்ரீராம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புருஷ் விஜயகுமார். பேண்டசி 4 காமெடி படமாக ‘பிரம்மா டாட் காம்’ உருவாகியிருக்கிறது. மனிதருக்கும், இறைவனுக்கும் இடையே நடைபெறும் ஓர் உரையாடலை மையமாக வைத்து படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார்களாம்.

அதற்கேற்ற மாதிரி படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் எல்லாம் வழக்கமான பாணியில் தோன்றாமல் வித்தியாசமாக தோற்றமளிப்பார்களாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்தப்படத்தை கம்ப்யூட்டர் காலத்திய திருவிளையாடல் என்றும் சொல்லலாம். இந்தப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.