“ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாதீர்கள்” – அறிமுகங்களுக்கு பேரரசு வேண்டுகோள்


இப்போதெல்லாம் தாங்கள் நடிக்கும் முதல் படத்திலேயே ரஜினி அளவிற்கு பில்டப் பாடலை அறிமுக பாடலாக வைத்து நடிக்கிறார்கள். ஆனால் முதல் படத்திலேயே ரஜினி, விஜய், அஜீத் ரேஞ்சுக்கு பாடல்களை வைக்காதீர்கள் அது படம் பார்க்க வருபவர்களை எரிச்சல் ஊட்டும் என அறிமுக நடிகர்களுக்கும் புதுமுகங்களை வைத்து இயக்கும் இயக்குனர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் இயக்குனர் பேரரசு.

இந்த அறிவுரையை கூறியது, தேவன் நடித்துள்ள ‘காதல் பஞ்சாயத்து’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான்
“நான் திருப்பாச்சி படத்தை இயக்கிய போது விஜய் ஆக்‌ஷன் ஹீரோவாக பெரிய ஆளாகிவிட்டார்.

அப்போது “நீ எந்த ஊரு நான் எந்த ஊரு” என்ற பாடலை பதிவு செய்து போட்டு காட்டினோம் அதை கேட்ட விஜய் இது சரியா வருமா? இவ்வளவு பில்டப் எடுபடுமா? என்று பலமுறை கேட்டார். அதன்பிறகு அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன். அவ்வளவு பெரிய நடிகரே பயந்த நேரம் உண்டு” என அதற்கு உதாராணத்தையும் கூறியுள்ளார் பேரரசு.