தியாகராஜன் வசம் கைமாறிய நேத்ரா.. பிப்-7ல் ரிலீஸ்..!

nethra

பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’. இந்தல் படத்தில் வினய் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சுபிஷா மற்றும் ரித்விகா ஆகியோர் நடித்துள்ளார். மேலும் படத்தில் தமன்குமார், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் ரெடியாக நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்தது. இயக்குனர் ஏ.வெங்கடேஷுக்கு உதவிடும் வகையில் நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன், தன்னுடைய ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

இதுகுறித்து ‘நேத்ரா’ பட இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘எனக்கு ஒரு திகில் படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காகவே இந்தப் படத்தை இயக்கினேன். கதை வெளிநாட்டில் நடப்பதால் கனடாவில் 95 சதவிகித படப்பிடிப்பை நடத்தினேன். இது திகில் படமாக இருந்தாலும், காமெடி செண்டிமென்ட் கலந்து உருவாகியுள்ளது. தற்போது இந்தப் படத்தை தியாகராஜன் வாங்கி வெளியிடுகிறார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 7ம் திரைக்கு வருகிறது’’ என்றார்.