‘நெருப்புடா’ பட விழாவில் விநியோகஸ்தர்களுக்கு ரஜினி வைத்த கோரிக்கை..!

neruppuda audio -rajini 1
விக்ரம் பிரபு முதன்முதலாக சொந்த பட நிறுவனம் ஆரம்பித்து தயாரித்து நடித்துள்ள படம் ‘நெருப்புடா’.. நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.. அறிமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கும் இந்தப்படத்துக்கு ‘நெருப்புடா’ என டைட்டில் வைத்ததாலோ என்னவோ, அன்னை இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அசத்தினார் சூப்பர்ஸ்டார் ரஜினி.

இந்த விழாவில் படக்குழுவினரை வாழ்த்தி பேசிய ரஜினி இரன்று வேண்டுகோள்களை வைத்தார்.. ஒன்று பத்திரிக்கை உள்ளிட்ட விமர்சகர்களுக்கு.. இன்னொன்று விநியோகஸ்தர்களுக்கு..

ஒரு படத்தை விமர்சிக்கும் உரிமை யாருக்கு வேண்டுமானாலும் உள்ளது.. தாராளமாக விமர்சியுங்கள்.. ஆனால் கண்ணியமாக, யார் மனதும் புண்படாதவாறு விமர்சியுங்கள்” என வேண்டுகோள் வைத்தார்..

அடுத்ததாக, ‘படம் தயாரிக்கிறவன் என் சரக்கு சூப்பரா இருக்குன்னு சொல்லி விக்கத்தான் பார்ப்பான். ஆனா விலைபேசி வாங்குற நீங்கதான், அந்த விலைக்கு இது தாங்குமா, போட்டா போட்ட காச எடுக்க முடியுமான்னு முடிவு பண்ணி வாங்கணும்.. வாங்கின பின்னாடி எனக்கு நட்டம், என் காசை குடுன்னு கேட்கிறது அழகில்லை” என படங்களை கன்னா பின்னா விலைக்கு வாங்கி, பின் நட்டப்பட்டதாக கொடி பிடிக்கும் விநியோகஸ்தர்களுக்கு அறிவுரை கலந்த வேண்டுகோளையும் வைத்தார் ரஜினி.