‘நீ ரொம்ப நல்லவன்டா’ – பிரமிப்பூட்டும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்..!

 

சினிமாவில் இயக்குனராக நுழைந்து கிட்டத்தட்ட இருபாதவது வருடத்தை தொடப்போகிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். சரத்குமாரின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் வெங்கடேஷ், விஜய், சிம்பு, அர்ஜூன், அருண்விஜய் என ஓவ்வொருவரையும் வைத்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை இயக்கியவர். கமர்ஷியல் வித்தைக்காரர்…

இந்த வருடத்தில் கில்லாடி, சண்டமாருதம் என இவர் இயக்கிய இரண்டு படங்கள் தொடர்ந்து வெளியானது ஆச்சர்யம் என்றால் அடுத்ததாக இவர் இயக்கியுள்ள ‘நீ ரொம்ப நல்லவன்டா’ என்கிற படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. சமீபத்தில் எந்த ஒரு இயக்குனருக்கும் ஓரே வருடத்தில் மூன்று படங்கள் ரிலீஸான அதிசய நிகழ்வு நடக்கவேயில்லை. அந்த வகையில் ஏ.வெங்கடேஷ் அதிர்ஷ்டசாலி தான்.

பப்பாளி, வெண்ணிலா வீடு படங்களை தொடர்ந்து மிர்ச்சி செந்தில் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ருதிபாலா தான் ஹீரோயின். இவர்கள் தவிர ரோபோ சங்கர், ஜான் விஜய், சோனா ஆகியோருடன் கடலோர கவிதைகள் ரேகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முன்பின் அறியாத இரண்டுபேருக்கு இடையே ஏற்படும் ஏழு நாள் நட்பும் அது தொடர்பான சுவராஸ்யங்களும் தான் படத்தின் கதை.