நயன்தாரா இரட்டை வேடங்களில் நடிக்கும் ஐரா..!

airaa 1

ஒரு படத்தையே தனி ஆளாக தாங்கிப்பிடிக்கும் கதாநாயகியாக சமீபகாலமாக மாறிவிட்டவர் நயன்தாரா. அப்படிப்பட்டவருக்கு அடுத்தததாக ‘ஐரா’ படத்தில் இன்னொருவரும் துணைக்கு நிற்கிறார்.. படப்படாதீர்கள்.. அவரும் நயன்தாரா தான். ஆம், முதன்முதாளாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் நயன்தாரா.

‘அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களை இயக்கிய, சமீபத்தில் வெளியான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ திரைப்படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார். இந்தப்படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜே பி ஆகியோருடன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

“நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கும் அவருடைய திரையுலக அந்தஸ்து ‘ஐரா’ படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை. சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது. இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார். ‘ஐரா’ என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு ஹாரர் படமாகும்” என்கிறார் தயாரிப்பாளர் கே.ஜே ராஜேஷ்.