நயன்தாராவின் ‘மாயா’வை வெளியிடுகிறது தேனாண்டாள் பிலிம்ஸ்..!

 

நயன்தாரா தற்போது நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் படம்தான் ‘மாயா’. நெடுஞ்சாலை ஆரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு முதலில் நைட்ஷோ என பெயர் வைத்தவர்கள், பின்னர் ‘ஆரம்பம்’ படத்தில் நயன்தாராவின் கேரக்டரான ‘மாயா’வையே படத்திற்கு டைட்டிலாக்கி விட்டார்கள். அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் கருணாஸுக்கும் முக்கிய ரோல் உண்டு.

தற்போது இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட இருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 1999ல் நெப்போலியன், நக்மாவை வைத்து ‘மாயா’ என்கிற பெயரிலேயே இதே தேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டது… ஒரே பெயர் கொண்ட இன்னொரு படத்தை அதே நிறுவனம் வெளியிடுவது ஒரு ஆச்சர்யமான நிகழ்வுதான்.