நயன்தாரா தானா..? நம்பவே முடியலை

aira (1)

இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஐரா’. இந்த திரில்லர் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் முக்கிய கதாபாரத்தில் கலையரசன், யோகிபாபு நடித்து வருகின்றனர். படத்தில நயன்தாரா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு கதாபாத்திரத்தில் கறுப்பான நிறத்தில், வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர், டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் பல படங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அந்த புகைப்படங்களை பார்க்கும்போது நயன்தாரா தானா இது என நம்பமுடியாத அளவுக்கு கருப்பா பயங்கரமா, இல்ல இல்ல பயங்கர கருப்பா காட்சி தருகிறார் நயன்தாரா.

இந்தப்படத்தினை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இயக்குனர் சார்ஜுனின் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்திற்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி கேஎஸ் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். படம் வரும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது..