மெத்தப்படிச்ச மேதாவியானார் நயன்தாரா..!

 

தமிழும் தெலுங்கும் வாரிவாரி கொடுத்து ராணியாக அமரவைத்து அழகு பார்த்தாலும் பிறந்தவீட்டு பாசம் இல்லாமல் போய் விடுமா? நயன்தாரா மலையாளத்தில் தற்போது ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்கிற படத்தில் நடித்துவருவது கூட அதன் விளைவுதான்.. சித்திக் இயக்கிவரும் இந்தப்படத்தில் மெகாஸ்டார் மம்முட்டி தான் ஹீரோ..

சித்திக் படம் என்றதுமே எந்த மறுப்பும் சொல்லாமல் மலையாளத்திற்கு ரிட்டர்ன் டிக்கெட் போட நயன்தாரா சமத்தித்துவிட்டார். மீண்டும் தாய்மொழியில் நடிக்கப்போகிறோம் என்கிற  சந்தோஷத்துடன், ஏற்கனவே சித்திக் இயக்கிய ‘பாடிகார்டு’ படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டுக்களை அள்ளி குவித்தாரே, அதுவும் ஒரு காரணம் தான்.

தற்போது இந்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் மிக உயரிய படிப்பை படித்தவராக நடிக்கிறார் நயன்தாரா. மம்முட்டியோ பெரிய அளவில் படிக்காத, ஆனால் வெளிநாட்டுக்கு போய் சம்பாதித்து வந்த கோடீஸ்வரனாக நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.