சிவகார்த்திகேயன் படத்தில் மீண்டும் நயன்தாரா..!

SK13 - nayanthara 1

நயன்தாரா சினிமாவில் கதாநாயகியாக நுழைந்த சமயம் தான் சிவகார்த்திகேயன், சேனல்களில் தனது காமெடி ஷோவில் என்ட்ரி கொடுக்கிறார்.. முதல் படத்தின் மூலம் உயரம் தொட்ட, ரஜினிக்கே ஜோடியாக் நடித்த அந்த நயன்தாரா, வேலைக்காரனில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் என்றால் காலம் தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்..

விஷயம் அத்தோடு நின்றுவிடவில்லை.. மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. ஆம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ் எம் இயக்கும் படத்தில் சிவகர்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் ராஜேஷ் எம் டைரக்சனில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஹிட் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.