நயன்தாராவின் நகங்களை வெட்டச்சொன்ன இயக்குனர்..!

இந்தியில் வித்யாபாலன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘கஹானி’ படத்தின் ரீமேக் தான் நயன்தாரா நடிக்க தெலுங்கில் ‘அனாமிகா’வும் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ எனவும் தயாராகி உள்ளது. காணாமல் போன கணவனைத் தேடி அலையும் கர்ப்பிணிப் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

நயன்தாராவின் திரையுலக பயணத்தில் ‘ நீ எங்கே என் அன்பே ‘ ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறும் இயக்குனர் நயன்தாராவின் தொழிபக்திக்கு உதாரணமாக ஒரு சில சம்பவங்களை குறிப்பிட்டார். “ஒரு முக்கியமான உணர்சிகரமான காட்சியை படமாக்கி கொண்டு இருந்தபோது தற்செயலாக அவரது கை விரல் நகங்களை கவனித்தேன். மிகவும் நேர்த்தியாக, அழகாக, நீளமாக இருந்தது.

ஆனால் கதைப்படி, அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு அழகாக இருக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த குறையை நயன்தாராவிடம் குறிப்பிட்டேன். அவருக்கே உரிய ஒரு புன்னகையோடு பின்னோக்கி நகர்ந்தார். இருந்தாலும் அவர் வருவதற்கு முன்னரே நான் அந்த காட்சியில் அவரது நகத்தை மறைத்து படம் பிடிக்க தயாராக நானும் அடுத்த காட்சிக்கான கவனத்தில் இருந்தேன்.

சில வினாடிகளில் அவர் திரும்பிய போது பார்த்தால் அவரது நகங்கள் நறுக்கப்பட்டு இருந்தது . இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. இதுதான் இன்றளவும் ஒரு வெற்றிகரமான நடிகையாக வலம் வர வைத்திருக்கிறது” என்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>