‘அறம்’ படத்தில் உதவி இயக்குனராகவும் இறங்கி வேலை பார்த்த நயன்தாரா..!

aram nayanthara

கோபி நயினார் டைரக்சனில் நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படம் வரும் நவ-1௦ஆம் தேதி ரிலேசாக இருக்கிறது. இந்தப்படத்தில் கதையின் நாயகியாக கலெக்டர் வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதனையொட்டி ‘அறம்’ படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்த கோபி நயினார் இந்தப்படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

“இந்தப்படத்தின் கதையை கேட்க ஆரம்பித்த அடுத்த ஐந்தாவது நிமிடமே நயன்தாரா இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அன்றிலிருந்து படப்பிடிப்பு முடிந்து, இதோ இப்போது படம் ரிலீசாகும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறார்.

இந்தப்படத்தின் ஷூட்டிங் பொட்டல் காட்டில் கொளுத்தும் வெயிலில் நடைபெற்றது. அவர் நினைத்திருந்தால் கேரவனில் ரெஸ்ட் எடுத்துவிட்டு போகலாம். ஆனால் காலையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் முடியும் வரை கேரவனுக்குள்ளேயே போகமாட்டார். அவரும் ஒரு உதவி இயக்குனர் போல அடுத்தடுத்த காட்சிகளை படமாக்குவதில் உதவி செய்தார்.. சமூகத்திற்கு இன்று தேவைப்படும் செய்தி ஒன்றை தைரியமாக சொல்வதற்கு இந்த நிமிடம் வரை நயன்தாரா எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்” என நயன்தாராவின் அர்ப்பணிப்பு உணர்வு பற்றி சிலாகித்து பேசினார் இயக்குனர் கோபி நயினார்.

இந்தப்படத்தில் இ.ராம்தாஸ், டி.சிவா, கிட்டி, ‘ராஜாராணி’ பாண்டியன், விஜய்டிவி புகழ் பழனி பட்டாளம் என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தண்ணீர் பிரச்சனையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படம் வெளியானபின் தமிழகத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்த போவது உறுதி.