போலீஸ் அதிகாரியாகிறார் நயன்தாரா.?

விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த ஜெயம் ராஜா தனது அடுத்த படத்தை துவங்கிவிட்டார். இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவுக்கு இதில் சாதாரண வேடம் இல்லையாம். போலீஸ் அதிகாரியாக விரும்பும் வேடமாம். இதற்காக தற்காப்புக் கலையான கராத்தே முதல் பக்காவான உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் நயன்தாரா.

ஏறகனவே பில்லா, ஆரம்பம் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்த அனுபவம்தான் நயன்தாராவுக்கு இருக்கிறதே.. அசத்திவிடமாட்டாரா என்ன.? ஆனால் ஜெயம் ராஜாவிடம் இதுபற்றிக் கேட்டால், “எனது படங்களில் எப்போதுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்தவகையில் இதிலும் நயன்தாராவுக்கு அருமையான கதாபாத்திரம்” என்று மட்டும் சொல்லியபடி மெதுவாக நழுவுகிறார்.

வெற்றிகரமான வசனகர்த்தாக்களாக வலம் வரும் இரட்டை எழுத்தளர்களான சுபா தான் இந்தப்படத்திற்கு வசனம் எழுதுகின்றனர். கல்பாத்தி அகோரம் இந்தப்படத்தை தயாரிக்கிறார். ஜெயம் ராஜா-ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் ஆறாவது படம் இது.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>