புதிய இன்னிங்ஸில் சுறுசுறுப்பான நவரச நாயகன்…!

udhayanidhi - karthik

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தனது நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நவரச நாயகன் கார்த்திக், தற்போது தனது புதிய இன்னிங்ஸில் தொடர்ந்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த வருட துவக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

இதையடுத்து தனது மகன் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து மிஸ்டர் சந்திரமௌலி என்கிற படத்தில் நடித்துள்ளார் கார்த்திக். தற்போது உதயநிதியுடன் இணைந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் கார்த்திக்.

கார்த்திக்கிற்கென ஒரு இடம் அப்படியே உள்ளது. அதை அவர் இந்த புதிய இன்னிங்ஸில் சரியாக பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கலாம்.