நாசா வேலையை உதறிவிட்டு நடிகரான விஞ்ஞானி..!

 

பேங்கில் வேலை பார்ப்பவர்கள், ஆசிரியராக இருந்தவர்கள், ஏன் டாக்டர்கள் கூட சினிமாவின் மீதுள்ள ஆசையால் தங்களது வேலையை உதறிவிட்டு நடிக்கவோ, படம் இயக்கவோ வந்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைபார்த்த தமிழர் ஒருவர் சினிமா மீது கொண்ட ஆசையால் அதை உதறிவிட்டு வந்திருக்கிறார் என்றால் சினிமாவின் வீரியத்தை பார்த்துக்கொள்ளுங்கள்..

அவர் தான் பார்த்திபன் என்கிற பார்த்தி.. ‘விஞ்ஞானி’ என்ற பெயரிலேயே படத்தை இயக்கி, தயாரித்து, நடித்தும் உள்ளார். படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நம்ம மீரா ஜாஸ்மின். இவர் தவிர சஞ்சனா சிங் மற்றும் இன்னொரு கதாநாயகியும் நடித்துள்ளனர். விவேக், தேவதர்ஷனியின் காமெடியும் உண்டு.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்தப்படத்தின் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை ஆகியவற்றை கவனித்து பார்த்திக்கு உறுதுணையாக இருந்தவர் சரத்குமாரை வைத்து ‘வைத்தீஸ்வரன்’ படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் தான். மூவாயிரம் வருஷத்துக்கு முந்தைய விஷயத்தையும் தற்போது நடக்கும் நிகழ்வுகளையும் வைத்து எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனை ஒன்றைத்தான் படமாக்கியுள்ளாராம் பார்த்தி.